விளையாட்டு

முத்தரப்பு தொடர் ஆஸி-தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

செய்திப்பிரிவு

ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் இன்று நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், தென் ஆப்பிரிக்காவும் மோதுகின்றன.

இந்தப் போட்டியின் லீக் சுற்றில் இரு அணிகளும் இரு முறை மோதி அதில் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் மெக்லாரன் காயம் காரணமாக விளையாடமாட்டார்.

இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு தொடங்குகிறது.

SCROLL FOR NEXT