பெர்த் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விளையாடாத அஸ்வின், மெல்போர்ன் டெஸ்ட் போட்டியிலும் காயத்திலிருந்து குணமடையாததால் விளையாட முடியாமல் போயுள்ளது குறித்து அஸ்வினின் டெஸ்ட் எதிர்காலம் குறித்த கவலைகளை முன்னாள் கேப்டன் கங்குலிக்கு அதிகரித்துள்ளது.
ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது:
ரவிச்சந்திரன் அஸ்வின் இப்போது எனக்கு பெரிய கவலைகளைத் தருகிறார். இப்படி முக்கியத் தொடர்களில் அவர் காயமடைந்து கொண்டிருந்தால் அவர் இந்திய அணியின் முன்னிலை சுழற்பந்து வீச்சாளராக இருக்க முடியாது.
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, தற்போது ஆஸ்திரேலியா என்று பெரிய தொடர்களிலெல்லாம் அவர் பாதியில் காயமடைந்து ஆட முடியாமல் போகிறது.
இடது கை வீரர்களுக்கு எதிராக அஸ்வின் தேவைப்படுகிறார், ஆனால் அவரோ அவர் மீது வைத்திருக்கும் நன்மதிப்புக்கு நல்லது செய்பவராகத் தெரியவில்லை.
இவ்வாறு கங்குலி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே கிரிக்கெட் எழுத்தாளர் ஆர்.மோஹன், அஸ்வின் காயமடைந்ததாகக் கூறுவது உண்மைதானா, உண்மையான காயமா என்று சந்தேகம் எழுப்பியதும் இதனுடன் நோக்கத்தக்கது.