இந்திய மல்யுத்த சங்கம் முதன் முறையாக வீரர், வீராங்கனை களுக்கு சம்பள ஒப்பந்தத்தை அமல்படுத்தியுள்ளது.
இதன்படி ஏ பிரிவில் நட்சத்திர வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், பூஜா தன்டா ஆகியோர் இடம் பெற்றுள் ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.30 லட்சம் சம்பளமாக வழங்கப் படும்.
பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் ஆகியோர் இந்த ஆண்டு நடை பெற்ற காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றிருந்தனர். அதேவேளையில் பூஜா தன்டா உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.
இருமுறை ஒலிம்பிக்கில் பதக் கம் வென்ற சுஷில் குமார், ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றிய சாக் ஷி மாலிக் ஆகியோர் சம்பள ஒப்பந்தத்தில் பி பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஒராண்டுக்கு ஊதியமாக தலா ரூ.20 லட்சம் பெறுவார்கள்.
சி பிரிவில் சந்தீப் தோமர், சஜன் பன்வால், வினோத் ஒம் பிரகாஷ், ரித்து போகத், சுமித் மாலிக், தீபக் பூனியா, திவ்யா கரண் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஊதியமாக ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
டி பிரிவில் இடம் பெற்றுள்ள ராகுல், நவீன், சச்சின் ரதி, விஜய், ரவி குமார், சிம்ரன், மான்ஷி, அன்சு மாலிக் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. - பிடிஐ