விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் தோனியின் விக்கெட் கீப்பிங் சாதனை

செய்திப்பிரிவு

கேட்ச்கள், ஸ்டம்பிங்குகள் முறையில் அதிக வீரர்களை அவுட் செய்த விக்கெட் கீப்பர் என்ற வகையில் டி20 கிரிக்கெட் போட்டிகளில் தோனி 2ஆம் இடத்தில் உள்ளார்.

அன்று பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிராக அஷிஷ் நெஹ்ரா பந்தில் கிரெய்க் சிம்மன்ஸ் என்ற வீரர் கொடுத்த கேட்சைப் பிடித்ததன் மூலம் மொத்தம் 124 பேர் அவுட் ஆகக் காரணமாக இருந்தவர் என்ற வகையில் சங்கக்காராவைக் கடந்து 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் தோனி.

151 டிஸ்மிஸல்களுடன் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் டி20 கிரிக்கெட் விக்கெட் கீப்பிங்கில் முதலிடம் வகிக்கிறார். தோனி 124 டிஸ்மிஸல்களுடன் 2வது இடம் பிடித்துள்ளார்.

கம்ரன் அக்மல் 138 போட்டிகளில் 151 பேரை அவுட் செய்துள்ளார். தோனி 189 போட்டிகளில் 124 பேரை அவுட் செய்துள்ளார். சங்கக்காரா 155 போட்டிகளில் 123 வீரர்களை அவுட் செய்துள்ளார்.

சங்கக்கராவுக்கு அடுத்தபடியாக தினேஷ் ராம்தின் (117), தினேஷ் கார்த்திக் (112) 4 மற்றும் 5ஆம் இடங்களில் உள்ளனர்.

SCROLL FOR NEXT