விளையாட்டு

ஆசிய விளையாட்டு துடுப்புப் படகு போட்டி: இந்திய வீரர் வெண்கலம் வென்றார்

செய்திப்பிரிவு

ஆசிய விளையாட்டு ஆண்களுக்கான தனிநபர் துடுப்புப் படகு போட்டியில் இந்தியாவின் ஸ்வரன் சிங் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

17–வது ஆசிய விளையாட்டு போட்டிகள் தென்கொரியாவின் இன்சியோன் நகரில் நடந்து வருகிறது. இதில், துடுப்புப் படகு போட்டியில் இன்று மேலும் ஒரு வெண்கலப் பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது.

ஆண்களுக்கான தனிநபர் துடுப்புப் படகு போட்டியில் இறுதிச்சுற்றில் இந்திய வீரர் ஸ்வரன் சிங் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். ஈரான் தங்கம் வென்றது, தென் கொரிய வீரர் வெள்ளிப்பதக்கம் வென்றார். புதன்கிழமை இந்தியாவின் துஷ்யந்த் வெண்கலப் பதக்கம் வென்றார்.

SCROLL FOR NEXT