இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாட்கட் மீண்டும் ரூ. 8.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இதை கிண்டல் செய்துள்ள சென்னை சூப்பர் கிங்க்ஸ் உனட்கட் உனக்கு எங்கேயோ மச்சம் என்று கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
புனே அணியில் கடந்த 2017-ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்டதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த ஆண்டு 11.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு சரியாக பந்து வீசாததால் அவரை அணியிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் விடுவித்தனர். இந்நிலையில் இன்று ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் இவரை ஏலம் எடுக்க போட்டியில் இறங்கியது.
ஆனால் அவரை விடுவித்து அனுப்பிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது மீண்டும் ரூ.8.4 கோடிக்கு அவரை ஏலம் எடுத்துள்ளது. உனட்கட் இந்திய அணியிலும் இல்லை, உலகக்கோப்பை அணியிலும் இவர் இடம்பெறும் வாய்ப்பில்லை அப்படியிருந்தும் இவ்வளவு தொகையை இருமுறை கொடுத்து இவரை ஏன் ஏலம் எடுக்க வேண்டும் என்பதும் புரியவில்லை.
மேலும் கடந்த ஐபிஎல் போட்டியில் இவர் சரியாக பந்து வீசவும் இல்லை. இந்நிலையில் இவரை எடுக்க ஏலத்தில் போட்டிபோட்ட சிஎஸ்கே எடுக்கமுடியாமல் போன நிலையில் அதன் ட்விட்டர் பக்கத்தில் 8.4 கோடிக்கு ஏலம் போனதை குறிப்பிட்டு ஜெயதேவ் உனாட்கட் இவனுக்கு எங்கேயோ மச்சம்டா சூப்பர் ஆக்ஷன், விசில் போடு என கிண்டலடித்துள்ளனர்.