விளையாட்டு

நீங்கள் சிக்ஸ் அடித்தால் நான் மும்பைக்கு மாறிவிடுகிறேன்: ரோஹித் சர்மாவைக் கிண்டல் செய்த பெய்ன்

செய்திப்பிரிவு

நிதானமாக தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்திய வீரர் ரோஹித் சர்மாவிடம் நீங்கள் சிக்ஸ் அடித்தால் நான் மும்பைக்கு மாறிவிடுகிறேன்  என்று அவரைச் சீண்டும் வகையில் ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடக்கும்  மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு  தற்போதுவரை இந்திய அணி 375 ரன்களை எடுத்துள்ளது.

புஜாரா 100 , கோலி 82, மயங்க் அகர்வால் 76 ரன்கள் என ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி வீரர்கள் வெளிப்படுத்தியதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு வலுவான இலக்கைத் தீர்மானிக்கும் நோக்கில் இந்திய அணி சென்றுள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் ஆதிக்கத்தைத் தடுக்க ஆஸ்திரேலியா பல்வேறு முறைகளில்  முயன்று வருகிறது. இந்திய அணி வீரர்களை கோபப்படுத்தும் முயற்சியிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த ரோஹித் சர்மாவிடம் ஆஸ்திரேலிய கேப்டனும் அந்த அணியின் விக்கெட் கீப்பருமான பெய்ன் ரோஹித் நீங்கள் சிக்ஸ் அடித்தால் நான் மும்பைக்கு மாறிவிடுகிறேன் என்று கூறிச் சிரிக்கிறார்.

எனினும் பெய்னின் வார்த்தைகளைக்  கண்டுகொள்ளாத ரோஹித் தொடர்ந்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

SCROLL FOR NEXT