விளையாட்டு

ஆசியப் போட்டி ஸ்குவாஷ்: இறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் சவுரவ் கோஷலுக்கு வெள்ளி உறுதி

செய்திப்பிரிவு

ஆசிய போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார் சவுரவ் கோஷல். இதற்கு முன்பு ஆசிய போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றதில்லை. இறுதி ஆட்டத்தில் சவுரவ் வென்றால் அவர் தங்கப் பதக்கத்தை கைப்பற்றுவார். இது இந்திய ஸ்குவாஷ் வரலாற்றில் புதிய சாதனையாக அமையவுள்ளது.

இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் குவைத் வீரர் அப்துல்லா அல்-முசாஜெனை அவர் எதிர்கொள்ள இருக்கிறார்.நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் அவர் மலேசியாவின் வோங் பென் ஹீயை எதிர் கொண்டார். 45 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 11-9. 11-4, 11-5 என்ற புள்ளிகள் கணக்கில் சவுரவ் வென்றார். இதன் மூலம் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினார்.

28 வயதாகும் சவுரம் கோஷல் கொல்கத்தாவை சேர்ந்தவர். இதற்கு முன்பு 3 முறை ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்றுள்ளார். இப்போது முதல்முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளார்.

SCROLL FOR NEXT