ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தான் அடித்த ஹெலிகாப்டர் ஷாட்டை வீடியோ பதிவாக தோனிக்கு பதிவிட்டிருக்கிறார்.
மிகக் குறைந்த ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை படைத்தவரும், ஆப்கானிஸ்தான் அணியின் சிறந்து ஆல் ரவுண்டராக வளர்ந்து வருகிறார் ராஷித் கான்.
19 வயதாகும் ராஷித் கான் துபாயில் நடைபெறும் T10 லீகில் , மராதா அரேபியன்ச் அணிகாக விளையாடி வருகிறார். இந்த நிலையில் கடந்த போட்டி ஒன்றில் தான் அடித்த ஹெலிகாப்டர் ஷாட்டை ட்விட்டரில் தோனிக்காக பதிவிட்டிருக்கிறார் ராஷித் கான்.
இதுகுறித்து ராஷித் கான் தோனியின் ட்விட்டர் ஐடியை குறிப்பிட்டு ட்விட்டரில், ”ஹெலிகாப்டர் ஷாட் கண்டுபிடிப்பாளரே... சகோதரர் தோனி” என்று பதிவிட்டுள்ளார்.
ராஷித் கானின் இந்த ஹெலிகாப்டர் ஷாட்டை ரிஷப் பண்ட், டாம் மூடி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.