விளையாட்டு

செய்தி துளிகள்

செய்திப்பிரிவு

கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி மோதும் 4 நாள் பயிற்சி ஆட்டம் சிட்னியில் இன்று தொடங்கவுள்ளது.

குத்துச்சண்டையில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை மேரி கோம், விளையாட்டு நிர்வாக அமைப்பான ஐஓஎஸ் நிறுவனத்துடன் தனது ஒப்பந்தத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டியான மகளிர் பிக்பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியுடனான ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நீட்டித்துள்ளார்.

இந்திய அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார். இதற்கு முன்னர் அவர் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடி வந்தார்.

வயதைக் குறைத்து மோசடி செய்யும் கிரிக்கெட் வீரர்களுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியே தனது இலக்கு என்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சென்னை திரும்பிய வீராங்கனை பவானிதேவி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT