விளையாட்டு

பிரையன் லாரா சாதனையை முறியடித்த சங்கக்காரா

செய்திப்பிரிவு

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது 10வது இரட்டைச் சதத்தை எடுத்த குமார் சங்கக்காரா மேற்கிந்திய நட்சத்திரம் பிரையன் லாராவின் சாதனையை முறியடித்தார்.

லாரா 9 இரட்டைச் சதங்களை அடித்திருந்தார். ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் 12 இரட்டைச் சதங்களை அடித்துள்ளார்.

ஆனால் 190 ரன்களுக்கும் அதிகமாக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் ரன்கள் எடுத்த வகையில் சங்கக்காரா 13 முறை எடுத்து டான் பிராட்மேன் சாதனையை முறியடித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக 221 ரன்களை எடுத்தார் சங்கக்காரா. சதங்கள் கணக்கில் 37-ஐ எட்டியுள்ளார் சங்கக்காரா.

டாப் இரட்டை சத நாயகர்கள்:

டான் பிராட்மேன் - 12

குமார் சங்கக்காரா - 10

பிரையன் லாரா - 9

வாலி ஹேமண்ட் (இங்கிலாந்து): 7

மஹேலா ஜெயவர்தனே: 7

சச்சின் டெண்டுல்கர் - 6

ரிக்கி பாண்டிங் - 6

விரேந்திர சேவாக் - 6

மர்வான் அட்டப்பட்டு - 6

ஜாவேத் மியாண்டட் - 6

SCROLL FOR NEXT