பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடரில் ஆட இந்தியா மறுத்து வருவதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மீது இழப்பீடாக பெரிய தொகை கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தது.
இது ஐசிசி தகராறு தீர்வாணயம் முன் விசாரணைக்கு வந்த போது தகராறுகள் குழு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் ஐசிசி தகராறு தீர்ப்பாணையத்தின் இந்தத் தீர்ப்பு பிணைப்புடையது மற்றும் மேல்முறையீடு செய்ய முடியாதது.
ஐசிசி குழுவின் இந்த முடிவு ‘கடும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும்’ அளிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்கால நடவடிக்கைகளில் இறங்கும் என்று தெரிவித்துள்ளது.
2015 முதல் 2023 வரை 8 ஆண்டுகளில் 6 இருதரப்பு தொடர்களில் இருநாடுகளும் ஆடும் என்று 2014-ல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதாவது அப்போது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஐசிசி நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தும் முடிவுக்கு பாகிஸ்தானின் ஆதரவை பெறுவதற்காக இம்மாதிரி ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அது பம்மாத்து ஒப்பந்தம் என்று அறியாத பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இருதரப்பு தொடர் நடைபெறவில்லை என இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்ந்தது.
அதாவது 63 மில்லியன் டாலர்கள் இழப்பீடு கேட்டு ஐசிசியிடம் வழக்குத் தொடர்ந்தது. இந்த இழப்பீடு ஒப்புக் கொள்ளப்பட்டு விளையாட முடியாமல் போன 2014 மற்றும் 2015 இருதரப்பு தொடர்களுக்காக.
இருநாடுகளும் ஒன்றையொன்று எதிர்த்து ஆடுவது அரசியல் சமாச்சாரம் என்று தெரிந்தும் இருதரப்பு ஒப்பந்தத்தில் இரு வாரியங்களும் கையெழுத்திட்டன, இதில் பிசிசிஐ தரப்பு ஐசிசி ஆதிக்க 3 வாரியங்களின் நன்மைக்காக பாகிஸ்தான் ஆதரவு கோரி இருதரப்பு தொடர் ஒப்பந்தம் என்ற உடன்படிக்கையை ஏற்படுத்தியது.
பிசிசிஐ என்ன கூறிவந்தது எனில் இருதரப்பு தொடருக்கான அனுமதி பிரதமர் அலுவலகத்தில் உள்ளது என்று கூறியது.