காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் பிரிவு 51கிலோ எடைப்பிரிவினருகான குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை பிங்கி ஜாங்ரா வெண்கலம் வென்றார்.
வடக்கு அயர்லாந்து வீராங்கனை மிச்சேலா வால்ஷிடம் அரையிறுதியில் போராடி தோல்வி தழுவினார் பிங்கி ஜாங்ரா.
அரையிறுதி முதல் சுற்றில் இருவரும் சமமாக மோதினர். இதில் அயர்லாந்து வீராங்கனையைக் காட்டிலும் ஒரு புள்ளியே பின் தங்கியிருந்தார் பிங்கி, 2வது சுற்றில் புள்ளிகள் இடைவெளி 2ஆக அதிகரித்தது.
2வது சுற்றில் பிங்கியின் ஒரு குத்து அயர்லாந்து வீராங்கனையின் முகத்தில் இறங்கியது, நிலைகுலைந்த அவர் கயிறு அருகே சென்று விட்டார். இருப்பினும் ஒரு நடுவர் மட்டுமே பிங்கி ஜாங்ராவுக்கு அதிக புள்ளிகள் வழங்கினார்.
3வது சுற்றில் பிங்கி 3 புள்ளிகள் பின் தங்கினார். ஆனால் கடைசி சுற்றில் அனைத்து நடுவர்களும் அயர்லாந்து வீராங்கனைக்குச் சார்பாக 10-9 என்று புள்ளிகளை வழங்கியதால் பிங்கி வாய்ப்பை இழந்தார்.
அயர்லாந்து வீராங்கனை தன்னை விட மிக உயரம் என்று கூறிய பிங்கி, அதனால் சற்று கடினமாக இருந்தது. என்னால் முடிந்த வரையில் முயற்சி செய்தேன் ஆனால் முடியவில்லை என்றார்.