விளையாட்டு

விராட் கோலி என்ற ஒரு நபர் தன் இஷ்டத்துக்குச் செயல்படுகிறார் நாமும் அனுமதிக்கிறோம்: பிஷன் சிங் பேடி கடும் விமர்சனம்

செய்திப்பிரிவு

‘கிங் கோலி’ என்று விராட் கோலியை பேட்டிங் சாதனைகளுக்காக அழைக்கலாம், ஆனால் அவர் தன் முழு அதிகாரத்தையும் தனி நபர் ஆட்சி போல் செயல்படுத்துவது தவறு என்ற பரவலான எண்ணம் அனைவரிடத்திலும் ஏற்பட்டுள்ள நிலையில் முன்னாள் இந்திய கேப்டன் பிஷன் சிங் பேடியும் இதனை ஆமோதித்துக் கடுமையாகச் சாடியுள்ளார்.

“நானும் இதைத்தான் கூறுகிறேன், ஒரு நபர், விராட் கோலி என்ற அந்த ஒரு நபர் தன் இஷ்டத்துக்கு தன் விருப்பப் படியெல்லாம் செய்து கொண்டிருக்கிறார், நாமும் அவரை விட்டுக் கொண்டிருக்கிறோம், வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அனில் கும்ப்ளே விவகாரத்தில் அனில் என்ன கூறியிருக்கப் போகிறார்... ஆனால் அவர் பெருந்தன்மையாக அப்படியே இதனை விட்டுவிட்டார்.

இந்திய அணி நன்றாக இருக்கிறது, ஆஸி. அணியைப் பலவீனம் என்றோம், ஆனால் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளும் பலவீனமான அணிகளே. வார்னர், ஸ்மித் தடை செய்யப்பட்டனர், ஆனால் ஒரு அணி இரு தனிநபர்களால் ஆனதல்ல, ஆனால் நம் அணியும் ஒரு நபரால் ஆனதுதான். அனைத்தும் கோலிதான்.

அவர் மீது இவ்வளவு கவனக்குவிப்பு இருந்தால் அவர் எப்படி ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியும்? ஒரு கேப்டனாக, ஒரு வீரராக அவர் மீது நாம் கடும் அழுத்தங்களை ஏற்படுத்துகிறோம்.

SCROLL FOR NEXT