இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக கேப்டன் தோனிக்கு போட்டி சம்பளத்தில் 60 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு 30 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் டெஸ்ட் போட்டி நடுவர் ரஞ்சன் மதுகலேவின் முடிவுப்படி இந்திய வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பந்து வீச அதிக நேரம் எடுப்பதுபோன்ற தவறுகளுக்கு அணி வீரர்களுக்கு விதிக்கப்படுவதை விட கேப்டனாக இருப்பவருக்கு இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும். அடுத்த ஓராண்டில் தோனி இதேபோன்ற தவறை மீண்டும் செய்தால் அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.