இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டம் இன்று சிட்னி நகரில் நடைபெறவுள்ளது.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலி யாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. பிரிஸ்பனில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது.
மெல்போர்னில் நேற்று முன்தினம் நடை பெற்ற 2-வது டி20 ஆட்டம் மழையின் காரண மாக பாதியில் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் 3-வது டி20 ஆட்டம் சிட்னியில் இன்று நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தை கட்டாயம் வென்று தொடரை சமன் செய்யும் கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. மாறாக தோல்வி அடையும் பட்சத்தில் ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிவிடும்.
இந்த ஆட்டத்தில் கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் ஆகியோர் சிறப்பான இன்னிங்ஸை விளை யாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அதைப் போலவே புவனேஸ்வர் குமார், கலீல் அகமது, ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ், கிருணல் பாண்டியா ஆகியோரும் சிறப்பான பந்துவீச்சுக்குத் தயாராகியுள்ளனர்.
அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணி தொட ரைக் கைப்பற்ற மும்முரம் காட்டி வருகிறது.
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே, ஷ்ரேயஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், கிருணல் பாண்டியா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், கலீல் அகமது, வாஷிங்டன் சுந்தர்.
ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப் டன்), ஆஷ்டன் அகர், ஜேசன் பெஹ்ரன்டார்ப், அலெக்ஸ் கேரே, நாதன் கவுல்ட்டர் நைல், கிறிஸ் லின், பென் மெக்டார்மெட், கிளென் மேக்ஸ்வெல், டிஆர்சி ஷார்ட், பில்லி ஸ்டான் லேக், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், ஆன்ட்ரூ டை, ஆடம் ஜம்பா.போட்டி நேரம்: பகல் 1.20
நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ், சோனி டென்