விளையாட்டு

‘கிங் கோலி’யின் சாதனைப் பட்டியலில் இன்னொன்று..  ‘தாதா’ கங்குலி சாதனை சமன்

செய்திப்பிரிவு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை நேற்று திருவனந்தபுர மகா வெற்றி மூலம் 3-1 என்று கைப்பற்றியது இந்திய அணி, இதில் தொடர் நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

3 சதங்களை தொடர்ச்சியாக அடித்து ஹாட்ரிக் சதங்கள் கண்ட இந்திய வீரர் என்ற சாதனையை கிங் கோலி நிகழ்த்தியதால் அவருக்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது.

ஒருநாள் தொடர் நாயகன் விருதுகளில் சச்சின் டெண்டுல்கர் 15 தொடர் நாயகன் விருதுகளுடன் முதலிடம் வகிக்கிறார். சனத் ஜெயசூரியா 11 தொடர் நாயகன் விருதுகளையும் ஷான் போலாக் 9 தொடர் நாயகன் விருதுகளையும் பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் கங்குலி 7 தொடர் நாயகன் விருதுகளைப் பெற்றுள்ளார்.

விராட் கோலி நேற்று பெற்ற தொடர் நாயகன் விருது 7வது தொடர் நாயகன் விருதாகும், இதன் மூலம் தாதா கங்குலி சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இந்தப் பட்டியலில் விவ் ரிச்சர்ட்ஸ், ரிக்கி பாண்டிங், ஹஷிம் ஆம்லா ஆகியோரும் 7 தொடர் நாயகன் விருதுடன் உள்ளனர்.

மே.இ.தீவுகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி 453 ரன்களைக் குவித்தார்.

ஞாயிறன்று மே.இ.தீவுகளுக்கு எதிராக முதல் டி20 போட்டி நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT