பிரிஸ்பேனில் இன்று நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்றார்.
கேப்டன் விராட் கோலி டாஸ்வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, டெஸ்ட், ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. பிரிஸ்பேனில் முதலாவது டி20 போட்டி இன்று நடக்கிறது.
கடந்த முறை பயணத்தில் இந்திய அணி டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வொயிட்வாஷ் செய்தது. ஆதலால், இந்த முறை டி20 போட்டி மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கப்படுகிறது. மேலும், ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வலிமை குன்றிய ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா மோதுகிறது.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்றைய போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். டாஸ் வென்றது குறித்து விராட் கோலி கூறுகையில் “ ஆடுகளத்தில் ஏராளமான புற்கள் காணப்படுகின்றன. ஆதலால், முதலில் பந்துவீச்சு நன்றாக எடுபடும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், ''டாஸ் வென்று இருந்தால், நிச்சயம் நான் பந்துவீச்சை தேர்வு செய்து இருப்பேன். அணியில் நாதன் கோல்டர் நீலுக்கு பதிலாக, இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பா சேர்க்கப்பட்டுள்ளார்'' எனத் தெரிவித்தார்
இந்திய அணி விவரம்:
விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், குர்னல் பாண்டியா, குல்தீப் யாதவ், யஜூவேந்திர சாஹல், கலீல் அகமது, புவனேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸி. அணி விவரம்:
ஆரோன் பிஞ்ச்(கேப்டன்), ஷார்ட், லின், மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், மெக்டார்மட்கேரே, ஆன்ட்ரூ டை, பெஹ்ரென்டார்ப், ஜம்பா, ஸ்டான்லேக்