டி20 தொடர் தொடங்கியதில் இருந்த பெரும்பாலான போட்டிகளில் கூல் கேப்டன் தோனி இடம் பெற்று வந்த நிலையில், முதல்முறையாக டி20 அணியில் இருந்து தோனி நீக்கப்பட்டுள்ளார். ஏறக்குறைய தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை மெல்ல முடிவுக்கு வருகிறது.
அடுத்து ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடுவதற்கு நீண்ட காலம் ஆகும். நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டி பிப்ரவரி மாதம் இருப்பதால், ஏறக்குறைய அடுத்து 4 மாதங்களுக்கு தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓரம் கட்டப்படுகிறார்.
2007 டி20 உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி ஆகியவற்றை தன் தலைமையின் கீழ் வென்ற தோனி, சமீபகாலங்களாக அவரது திறமைக்கேற்ப ஆடவில்லை, ஆகவே அணியில் அவரது இடம்பற்றி கேள்விகள் எழும்பத் தொடங்கின, இந்நிலையில் மே.இ.தீவுகள் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களிலிருந்து தோனி நீக்கப்பட்டு இருப்பது சரியான முடிவு தானா...
வாருங்கள்.... விவாதிக்கலாம்...!