இந்தியா ரன்னர் என்ற அமைப்பு சார்பில் மாதந்தோறும் மாரத்தான், நடை பந்தயம், சைக்கிள் பந்தயம் சாலஞ்ச் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் செப்டம்பர் மாதத்துக்கான மாரத்தான் போட்டியில் காஞ்சி புரம் மாவட்டம் தாம்பரம் அருகில் உள்ள, நடுவீரப்பட்டு ஊராட்சியை சேர்ந்த தினேஷ் கண்ணன் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.ஒரு மாத காலத்தில் போட்டி அமைப்பினர் விதித்த விதிகளின் படி தினேஷ் கண்ணன் தினமும் 25 முதல் 30 கிலோ மீட்டர் தூரம் ஓடி மொத்தம் 789 கிலோ மீட்டர் கடந்து முதலிடம் பிடித்துள்ளார்.
தினேஷ் கண்ணன், சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.ஏ. தமிழ் பயின்று வருகிறார். கல்லூரி பயிற்சியாளர் பெருமாள் ராமசாமியின் வழிகாட்டுதலில் மாரத்தான் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதாக தினேஷ் தெரிவித்தார்.