விளையாட்டு

ஷிகர் தவணை அவர் பாணியிலேயே கிண்டல் செய்த கீமோ பால்

செய்திப்பிரிவு

மும்பையில் நடைபெறும் 4வது ஒருநாள் போட்டியில் ஷிகர் தவண் மீண்டுமொரு முறை தனது அதிரடி தொடக்கத்தை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் கீமோ பால் பந்தில் ஷார்ட் மிட்விக்கெட்டில் மென்மையாக கேட்ச் கொடுத்து 38 ரன்களில் வெளியேறினார்.

40 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் அவர் 38 ரன்கள் எடுத்து,  கீமோ பால் பந்தை மந்தமாக புல் ஷாட் ஆடி அதற்காகவே அங்கு ஷார்ட் மிட் விக்கெட்டில் நிறுத்தப்பட்டிருந்த போவெலிடம் கேட்சிங் பிராக்டீஸ் கொடுத்தார்.

பொதுவாக தவண் கேட்சை எடுத்தாலோ, எதிரணி வீரர் அவுட் ஆகக் காரணமாக இருந்தாலோ தன் காலை கொஞ்சம் மேலே உயர்த்தி தொடையில் தன் கையால் அடித்து கையை மேலே உயர்த்திக் கொண்டாடுவது வழக்கம்.

இது ஏதோ ஒரு விதத்தில் மே.இ.வீரர் கீமோ பாலை வெறுப்பேற்றியுள்ளது, அதனால் இம்முறை அவர் விக்கெட்டை வீழ்த்திய உடன் ஷிகர் தவண் பிட்சை கிராஸ் செய்யும் போது கிமோ பால் தன் காலை உயர்த்தி தொடையைத் தன் கையால் தட்டி கையை உயர்த்தி கொண்டாடினார். இது சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.

இந்திய அணி ரோஹித் சர்மா (162), ராயுடு (100) சதங்களினால் 50 ஓவர்களில் 377/5 என்று மிகப்பெரிய ஸ்கோரை எட்டியது.

SCROLL FOR NEXT