விளையாட்டு

மே.இ.தீவுகள் பயிற்சியாளர் விலகல்

செய்திப்பிரிவு

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஓட்டிஸ் ஜிப்சன் திடீரென விலகியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள்-வங்கதேசம் இடையிலான தொடருக்கு முன்னதாக அவர் விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரு தரப்பும் பரஸ்பர சம்மதத்துடன் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளது.

ஜிப்சனின் விலகலைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மேலாளர் ரிச்சி ரிச்சர்ட்சன் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர் முடியும் வரை அவரே பயிற்சியாளராக இருப்பார்.

SCROLL FOR NEXT