2-வது மெரீனா ஓபன் ஏஐடிஏ ரேங்கிங் வீல்சேர் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கர்நாடகாவின் சேகர் வீராசாமி முதலிடம் வென்றார்.
இந்த டென்னிஸ் போட்டிகள் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வந்தன.
இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சேகர் வீராசாமி 6-4, 7-5 என்ற செட் கணக்கில் தமிழக வீரர் எஸ். பாலச்சந்தரை வென்று முதலிடம் பிடித்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் கர்நாடக வீராங்கனை பிரதிமா ராவ் 7-6, 6-1 என்ற செட் கணக் கில் சக மாநில வீராங்கனை யான கே.பி. ஷில்பாவை வென்றார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் சேகர் வீராசாமி-எஸ். பாலச்சந்தர் ஜோடி 6-2, 6-2 என்ற கணக்கில் தமிழகத்தின் டி. மாரியப்பன்-சதாசிவ் கண்ணுபையன் ஜோடியை வீழ்த்தியது. இதே போல மகளிர் பிரிவில் பிரதிமா ராவ்-ஷில்பா ஜோடி பட்டத்தைக் கைப்பற்றியது. இறுதி ஆட்டத்தில் பிரதிமா-ஷில்பா ஜோடி 6-0, 6-0 என்ற செட் கணக்கில் கீதா சவுகான்-குஷ்பூ கனாத்ரா ஜோடியைத் தோற்கடித்தது.
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் வி. பாஸ்கரன், எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீஸஸ் நிறுவன அதிகாரி பனீஷ் ராவ் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் வென்றவருக்கு ரூ.30 ஆயிரம் ரொக்கம், 30 ஏஐடிஏ புள்ளிகளும், 2-ம் இடம் பெற்றவருக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கம், 22 ஏஐடிஏ புள்ளிகளும் வழங்கப் பட்டன. மகளிர் ஒற்றையர் பிரிவில் வென்றவருக்கு ரூ.13 ஆயிரம் ரொக்கம், 15 ஏஐடிஏ புள்ளிகளும், 2-ம் இடம் பெற்றவருக்கு ரூ.6 ஆயிரம் ரொக்கம், 12 ஏஐடிஏ புள்ளிகளும் வழங்கப்பட்ன