விளையாட்டு

சோனி சிக்ஸில் சிடிஎல்

செய்திப்பிரிவு

சாம்பியன்ஸ் டென்னிஸ் லீக் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை சோனி சிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

ஐபிஎல் போட்டி பாணியில் சாம்பியன்ஸ் டென்னிஸ் லீக் போட்டிகளை முன்னாள் இந்திய டென்னிஸ் வீரர் அமிர்தராஜ் நடத்துகிறார். வரும் நவம்பர் 17 முதல் 26 வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது. 6 நகரங்களை அடிப்படையாகக் கொண்டு 6 அணிகள் இடம்பெறுகின்றன.

இந்த 6 அணிகளும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளை எதிர்த்து தலா இருமுறை மோதும். லீக் சுற்றில் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

SCROLL FOR NEXT