விளையாட்டு

பளுதூக்கும் வீராங்கனை சந்தோஷி மாட்சாவின் வெண்கலப்பதக்கம் வெள்ளிப்பதக்கமாக உயர்த்தப்பட்டது

செய்திப்பிரிவு

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் பளுத்தூக்குதல் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சந்தோஷி மாட்சா வென்ற வெண்கலப் பதக்கம் வெள்ளிப்பதக்கமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மற்றொரு இந்திய வீராங்கனை ஸ்வாதி சிங் 4வது இடத்தில் முடிந்தார். அவருக்கு தற்போது வெண்கலம் கிடைத்துள்ளது.

இதே பிரிவில் நைஜீரிய வீராங்கனை சிகா அமலாஹா தங்கம் வென்றிருந்தார். ஆனால் அவர் ஊக்கமருந்து எடுத்துக் கொண்டது நிரூபணம் ஆனதால் அவரது தங்கம் பறிக்கப்பட்டது.

இதனையடுத்து முன்பு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்ட பபுவா நியுகினியா வீராங்கனை டிகா தூவாவுக்கு தங்கம் வழங்கப்பட்டது. 16 வயதில் தங்கம் வென்று சாதித்த அமலாஹாவின் சாதனை தற்போது சாதனைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.

SCROLL FOR NEXT