நெல்சன்: நியூஸிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி நெல்சன் நகரில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 6.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் தொடர் மழை காரணமாக போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் நியூஸிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. கடைசி மற்றும் 5-வது போட்டி வரும் 13-ம் தேதி டூனிடின் நகரில் உள்ள யுனிவெர்சிட்டி ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.