கோயம்புத்தூர்: தமிழக அணிக்கெதிரான ரஞ்சி டிராபி கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டி கோயம்புத்தூரில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் தமிழக அணி 4 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2-ம் நாள் ஆட்டத்தில் தமிழக வீரர்கள் ஷாருக் கான் 0, பாபா இந்திரஜித் 94 ரன்களுடன் தொடங்கினர்.
இந்திரஜித் 96 ரன்களில் வீழ்ந்தார். ஷாருக் கான் 17, முகமது அலி 14 ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். தமிழக அணி 107.1 ஓவர்களில் 291 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய விதர்பா அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில், 2 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்துள்ளது. அமன் மோகடே 80, சத்யம் போயார் 11 எடுத்து வீழ்ந்தனர். துருவ் ஷோரே 80, ரவிகுமார் சமர்த் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.