விளையாட்டு

மருத்துவமனையில் இருந்து ஸ்ரேயஸ் ஐயர் டிஸ்சார்ஜ்

செய்திப்பிரிவு

சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் போட்டித் தொடரில் நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற 3-வது போட்டியின்போது இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயர் பீல்டிங் செய்தபோது காயமடைந்தார்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஸ்கேன் செய்தபோது மண்ணீரலில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் குணமடைந்த நிலையில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT