பெங்களூரு: பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்திய ஏ, தென் ஆப்பிரிக்க ஏ அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க ஏ அணி 309 ரன்களும், இந்திய ஏ அணி 234 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன.
இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து இந்திய ஏ அணி 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கியது.
நேற்று நடைபெற்ற 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய ஏ அணி 39 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. சாய் சுதர்சன் 12, ஆயுஷ் மாத்ரே 6, தேவ்தத் படிக்கல் 5, ரஜத் பட்டிதார் 28 ரன்கள் எடுத்து வீழ்ந்தனர். ஆயுஷ் பதோனி ரன் கணக்கைத் தொடங்காமலும், கேப்டன் ரிஷப் பந்த் 64 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.