நவி மும்பை: நடப்பு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டி நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில், போட்டி நாளன்று நவி மும்பை வானிலை நிலவரம் என்னவென்று பார்ப்போம்.
இதில் வெற்றி பெறுகின்ற அணி மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற சாதனையை படைக்கும். அரையிறுதியில் வரலாற்று சாதனை மிக்க ரன் விரட்டலை படைத்து இந்தியா இறுதிக்கு முன்னேறியது.
இறுதிப் போட்டி நடைபெறும் நவ.2-ம் தேதி அன்று 60 சதவீதம் மழை பொழிவுக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி போட்டி நாளன்று ஆட்டத்தில் முடிவு எட்ட முடியாத சூழல் நிலவினால் ரிசர்வ் நாளன்று போட்டி நடத்தப்படும். அதை விதிகள் அனுமதிக்கின்றன. இருப்பினும் திங்கட்கிழமை அன்றும் நவி மும்பை 55 சதவீத வாய்ப்பு இருப்பதாக தகவல்.