விளையாட்டு

பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி

செய்திப்பிரிவு

ராவல்பிண்டி: பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று முன்தினம் ராவல்பிண்டில் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடின.

முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 60, ஜார்ஜ் லிண்டே 36, டோனி டி ஸோர்ஸி 33, குயிண்டன் டி காக் 23 ரன்கள் சேர்த்தனர். 195 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 139 ரன்களுக்கு சுருண்டது.

முகமது நவாஷ் 36, சைம் அயூப் 37, சாஹிப்ஸதா பர்ஹான் 24, உஸ்மான் கான் 12 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. தென் ஆப்பிரிக்க அணி சார்பில் கார்பின் போஷ் 4, ஜார்ஜ் லிண்டே 3, லிஸாத் வில்லியம்ஸ் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

SCROLL FOR NEXT