விளையாட்டு

முதல் முறையாக முதலிடம் பிடித்தார் ரோஹித் சர்மா!

செய்திப்பிரிவு

துபாய்: ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின்
சீனியர் நட்சத்திர வீரரான ரோஹித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் 38 வயதான ரோஹித் சர்மா 121 ரன்கள் விளாசியிருந்தார். இதன் மூலம் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தை அடைந்துள்ளார். தரவரிசை பட்டியலில் ரோஹித் சர்மா முதலிடத்தை பிடிப்பது இதுவே முதன்முறையாகும்.

SCROLL FOR NEXT