செங்டு: ஆசிய 17 வயதுக்குட்பட்டோர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஷைனா மணிமுத்து, தீக்சா சுதாகர் ஆகியோர் தங்கம் வென்றனர்.
சீனாவின் செங்டு நகரில் இந்த பாட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வந்தன. நேற்று நடைபெற்ற 15 வயதுக்குட்பட்டோர் மகளிர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை ஷைனா மணிமுத்து, ஜப்பானின் சிஹாரு டோமிடாவுடன் மோதினார்.
இதில் ஷைனா 21-14, 22-20 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். 17 வயதுக்குட்பட்டோர் மகளிர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் தீக்சா சுதாகர் 21-16, 21-9 என்ற புள்ளிகள் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த லக்சயா ராஜேஷை வீழ்த்தி தங்கம் வென்றார்.