மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய டி20 அணி ஆஸ்திரேலியா வந்தடைந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து வரும் 29-ம் தேதி முதல் 5 சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் விளையாட உள்ளன.
இந்நிலையில் சர்வதேச டி20 தொடரில் பங்கேற்பதற்காக இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளது. இந்திய அணியில் இடம்பெற்றுள்ள கேப்டன் சூர்யகுமார் யாதவ், பும்ரா, திலக் வர்மா, ஷிவம் துபே, துருவ் ஜூரல், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் ஆகியோர் ஆஸ்திரேலியா வந்தடைந்துள்ளனர்.
ஒருநாள் தொடரில் இடம்பெற்றுள்ள சில வீரர்களும், இந்திய டி20 அணியில் இணைந்து கொள்ள உள்ளனர். டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறாத ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் விரைவில் தாயகம் திரும்ப உள்ளனர்.