சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அதிரடி இடது கை தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அசத்தலான சாதனையைச் செய்தார். அவர் 76 ஒரு நாள் போட்டிகளில் 3,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதற்கு முன் ஸ்டீவ் ஸ்மித் 79 போட்டிகளில் எடுத்த 3000 ரன்கள் என்ற அதிவேக மூவாயிரம் மைல்கல்லை இன்று ஹெட் முறியடித்தார்.
ஹெட்டின் இந்த சாதனை அவரது தொடர்ச்சியான அதிரடி பேட்டிங் திறனை வெளிப்படுத்துவதோடு, குறுகிய காலத்திலேயே அவர் ஒரு முக்கியமான நட்சத்திரமாக மாறியுள்ளதையும் நிரூபித்துள்ளது.
ஸ்டீவ் ஸ்மித் இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கைக்குரிய அனைத்து வடிவ பேட்ஸ்மேன் எனப் பார்க்கப்பட்ட நிலையில், ஹெட் அவருக்கு இணையாகக் கருதப்பட முடியாவிட்டாலும் அவரை முறியடிக்கும் சாதனையைப் படைத்திருப்பது ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. அதுவும் இந்திய அணிக்கு எதிராக டிராவிஸ் ஹெட் முக்கியப் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடப்புத் தொடரில் பெர்த், அடிலெய்டில் டிராவிஸ் ஹெட்டை தட்டிப்போட்டு இந்திய அணி வீழ்த்தியது ஒருவாறு அவர் ஒர்க் அவுட் செய்யப்பட்டுக் காலி செய்யப்பட்டார். அதனால் இன்று எப்படியாவது ஒரு பெரிய இன்னிங்ஸை ஆடிவிடுவது என்று சிராஜையும் ஹர்ஷித் ராணாவையும் நிதானமாகவே ஆடினார். வெயிட்டிங் கேம் இன்று அவர் ஆடி எங்கு நின்று விடுவாரோ என்று அச்சுறுத்தினார்.
பந்துகளும் அவர் ஸ்ட்ரோக்குகளுக்குச் சாதகமாக வரவில்லை. பிட்சில் இருக்கும் விரிசல்களில் பட்டு பந்துகள் கடுமையாக ஸ்விங் ஆகின. இன்று 3வது ஓவரில் சிராஜை பவுண்டரி விளாசித் தொடங்கினார் ஹெட், பிறகு சிராஜ் லெந்த்தில் பிழை செய்ய மேலும் 2 பவுண்டரிகள் விளாசினார். பிறகு பிரசித் கிருஷ்ணாவின் எக்ஸ்பென்சிவ் முதல் ஓவரில் ஹெட் ஒரு பவுண்டரி அடித்தார். பவர் ப்ளேயின் கடைசி ஓவரில் கவரில் சிராஜை ஹெட் தூக்கி அடித்த போது இன்று இந்திய பவுலிங் கடும் சோதனைகளைச் சந்திக்கப் போகிறது என்று நினைக்கும் போதே சிராஜின் பந்தை கட் செய்ய முயன்று 30 அடி வட்டத்தில் சரியாக நின்று கொண்டிருந்த பிரசித் கிருஷ்ணாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
29 ரன்களில் ஸ்மித் அவுட் ஆனார். இந்தத் தொடரில் அவரது அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் இதுதான். ஆனால் 3000 ஒருநாள் ரன்களை 76 இன்னிங்ஸ்களில் எடுத்து ஸ்மித் சாதனையை உடைத்தார். 3000 ரன்களை விரைவில் எடுத்ததில் 3வது இடத்தில் ஜார்ஜ் பெய்லி, மைக்கேல் பெவன் உள்ளனர். இருவரும் 80 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டினர்.
3000 ரன்களுக்கு டிராவிஸ் ஹெட் 2,839 பந்துகளை எதிர்கொண்டார். ஆனால் கிளென் மேக்ஸ்வெல் 2,440 பந்துகளிலும் ஜாஸ் பட்லர் 2533 பந்துகளிலும் ஜேசன் ராய் 2,820 பந்துகளிலும் இந்த மைல்கல்லை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.