விளையாட்டு

இந்தியாவில் நடைபெறும் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் விலகல்

வேட்டையன்

சென்னை: வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி விலகி உள்ளது. இதன் சர்வதேச ஹாக்கி சம்மேளனம் உறுதி செய்துள்ளது.

சர்​வ​தேச ஹாக்கி சம்​மேளனத்​தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வரும் நவம்​பர் 28 முதல் டிசம்​பர் 10-ம் தேதி வரை சென்னை மற்​றும் மதுரை​யில் நடை​பெற உள்​ளது. இதில் போட்​டியை நடத்​தும் இந்​தியா உள்​ளிட்ட 24 அணி​கள் கலந்து கொள்​கின்​றன. இவை 6 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன.

ஒவ்​வொரு பிரி​விலும் நான்கு அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. நடப்​புச் சாம்​பியன் ஜெர்​மனி ஏ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இதே பிரி​வில் தென் ஆபிரிக்​கா, கனடா, அயர்​லாந்து அணி​களும் இடம் பெற்​றுள்​ளன.

போட்​டியை நடத்​தும் இந்​தியா ‘பி' பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இதே பிரி​வில் பாகிஸ்​தான், சிலி, சுவிட்​சர்​லாந்து ஆகிய அணி​களும் உள்​ளன. ‘சி' பிரி​வில் அர்​ஜென்​டி​னா, நியூஸிலாந்​து, ஜப்​பான், சீனா ஆகிய அணி​கள் இடம் பிடித்​துள்​ளன. ‘டி' பிரி​வில் ஸ்பெ​யின், பெல்​ஜி​யம், எகிப்​து, நமீபியா ஆகிய அணி​களும், ‘இ' பிரி​வில் நெதர்​லாந்​து,மலேசி​யா, இங்​கிலாந்​து, ஆஸ்​திரியா ஆகிய அணி​களும் ‘எஃப்' பிரி​வில் பிரான்​ஸ், ஆஸ்​திரேலி​யா, கொரி​யா, வங்​கதேசம் ஆகியஅணி​களும் இடம்​பெற்​றுள்​ளன.

பாகிஸ்தான் விலகல்: இந்த தொடரில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. தங்களால் இந்த தொடரில் பங்கேற்க முடியாது என பாகிஸ்தான் தரப்பில் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு மாற்றாக விளையாடும் அணி விரைவில் இறுதி செய்யப்படும் என தகவல்.

கடந்த 2021-ல் புவனேஸ்வரில் நடைபெற்ற இந்த தொடரில் பாகிஸ்தான் அணி 11-வது இடம் பிடித்தது. கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. இதற்கு பதிலடி தரும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் புகலிடங்களை தாக்கி அழித்தன. இதன் தாக்கம் இரு நாட்டு அணிகள் பங்கேற்று விளையாடும் விளையாட்டு தொடர்களிலும் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT