விளையாட்டு

டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கு தகுதி பெற்றது ஐக்கிய அரபு அமீரக அணி!

வேட்டையன்

சென்னை: அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஐக்கிய அரபு அமீரக அணி தகுதி பெற்றுள்ளது.

வியாழக்கிழமை அன்று ஓமனில் நடைபெற்ற ஆசியா / கிழக்கு ஆசிய பசிபிக் தகுதி சுற்றின் ‘சூப்பர்-6’ போட்டியில் ஜப்பான் அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது ஐக்கிய அரபு அமீரக அணி. இதன் மூலம் இந்த பிரிவில் நேபாளம் மற்றும் ஓமன் அணியை தொடர்ந்து மூன்றாவது அணியாக ஐக்கிய அரபு அமீரகம் தகுதி பெற்றுள்ளது.

டி20 உலக கோப்பை 2026: இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு இந்த தொடர் நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் இந்தியா இந்த தொடரில் விளையாட உள்ளது. இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், கனடா, இத்தாலி, நெதலர்லாந்து, அயர்லாந்து, நேபாளம், ஓமன், நமீபியா, ஜிம்பாப்வே, அமெரிக்கா ஆகிய அணிகள் இந்த தொடரில் விளையாடுகின்றன.

SCROLL FOR NEXT