விளையாட்டு

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐஎஸ்​எஸ்​எஃப் ஜூனியர் உலகக் கோப்பை துப்​பாக்கி சுடு​தல் போட்டி டெல்​லி​யில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவருக்​கான 10 மீட்​டர் ஏர் பிஸ்​டல் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் ஜோனாதன் கவின் அந்​தோணி 244.8 புள்​ளி​களை குவித்து முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் வென்​றார்.

இத்​தாலி​யின் லூகா அரிகி (236.3) வெள்​ளிப் பதக்​க​மும், ஸ்பெ​யினின் லூகாஸ் சான்​செஸ் டோம் ( 215.1) வெண்​கலப் பதக்​க​மும் கைப்​பற்​றினர். மகளிருக்​கான 10 மீட்​டர் ஏர் பிஸ்​டல் இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் ராஷ்மிகா சாஹல் 236.1 புள்​ளி​களு​டன் வெள்​ளிப் பதக்​கம் வென்​றார்​.

SCROLL FOR NEXT