விளையாட்டு

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் - ஓமன் இன்று மோதல்

செய்திப்பிரிவு

துபாய்: ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமனுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் அணி சமீபத்தில் முத்தரப்பு டி20 தொடரில் கோப்பையை வென்ற நிலையில் களமிறங்குகிறது.

இன்றைய போட்டி நடைபெறும் துபாய் ஆடுகளம் சுழலுக்கு சாதகமானதாக அமையக்கூடும் என்பதால் அப்ரார் அகமது, சுஃபியான் முகீம், முகமது நவாஸ் ஆகியோரை உள்ளடக்கிய பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சு கூட்டணி ஓமன் அணிக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். பேட்டிங்கில் சைம் அயூப், பஹர் ஸமான், கேப்டன் சல்மான் ஆகா ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் ஷாகின் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூப் வலுசேர்க்கக்கூடும்.

ஆசியக் கோப்பையில் முதன்முறையாக அறிமுகமாகும் ஓமன் அணி, அழுத்தத்துடனுடம் அதேவேளையில் பெரிய கனவு களுடனும் களமிறங்குகிறது.

SCROLL FOR NEXT