தமிழரசு படத்தில் இடது பக்கம் இருப்பவர். 
விளையாட்டு

100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் தமிழரசு!

செய்திப்பிரிவு

சென்னை: 64-வது தேசிய சீனியர் மாநிலங்களுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் சென்னை நேரு விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவருக்கான போல் வால்ட்டில் தமிழகத்தைச் சேர்ந்த கவுதம், ரீகன், கமல் ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்றனர்.

ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் தமிழரசு பந்தய தூரத்தை 10.22 விநாடிகளில் கடந்து புதிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

மற்றொரு தமிழக வீரரான ராகுல் குமார் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தனலெட்சுமி தங்கப் பதக்கமும், அபிநயா ராஜராஜன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

SCROLL FOR NEXT