விளையாட்டு

முதல்வர் கோப்பை விளையாட்டு: இணையதள முன்பதிவு கால அவகாசம் நீட்டிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு முதல்வர் கோப்பை போட்டிகள் 2025 மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் கோப்பை 2025 விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு கடந்த ஜூலை 14 முதல் https://cmtrophy.sdat.in/https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை 10 லட்சம் போட்டியாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவுக்கான கடைசி நாள் ஆகஸ்ட் 16 என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இணையதள முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் வரும் 20-ம் தேதி இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT