விளையாட்டு

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: 307 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது நியூஸி.

செய்திப்பிரிவு

புலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 307 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. புலவாயோ நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 60.3 ஓவர்களில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் கிரெய்க் இர்வின் 39, தஃபட்ஸ்வா சிகா 30, நிக் வெல்ச் 27 ரன்கள் சேர்த்தனர். நியூஸிலாந்து அணி சார்பில் மேட் ஹன்றி 6, நேதன் ஸ்மித் 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையடுத்து விளையாடிய நியூஸிலாந்து அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 26 ஓவர்​களில் விக்​கெட் இழப்​பின்றி 90 ரன்​கள் எடுத்​திருந்​தது. வில் யங் 41, டேவன் கான்வே 51 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை நியூஸிலாந்து அணி தொடர்ந்து விளை​யாடியது. வில் யங் மேற்​கொண்டு ரன்​கள் சேர்க்​காத நிலை​யில் முசா​ராபனி பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

இதையடுத்து களமிறங்​கிய ஹென்றி நிக்​கோல்ஸ் 34, ரச்​சின் ரவீந்​திரா 2 ரன்​களில் நடையை கட்​டி
னர். சதம் அடிக்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​பட்ட டேவன் கான்வே 170 பந்​துகளில், 12 பவுண்​டரி​களு​டன் 88 ரன்​கள் விளாசிய நிலை​யில் ஷிவாங்கா பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். அவருக்கு உறு​துணை​யாக விளை​யாடிய டேரில் மிட்​செல் 119 பந்​துகளில், 5 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸருடன் 80 ரன்​கள் விளாசிய நிலை​யில் நயம்​ஹுரி பந்​தில் போல்​டா​னார்.

இவர்​களை தொடர்​ந்து டாம் பிளண்​டெல் 2, மைக்​கேல் பிரேஸ்​வெல் 9, கேப்​டன் மிட்​செல் சாண்ட்​னர் 19, மேட் ஹென்றி 5 ரன்​களில் வெளி​யேறினர். நேதன் ஸ்மித் 22 ரன்​கள் எடுத்த நிலை​யில் காயம் காரண​மாக வெளி​யேறி​னார். முடி​வில் 96.1 ஓவர்​களில் 307 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தது நியூஸிலாந்து அணி. ஜிம்​பாப்வே அணி தரப்​பில் பிளெஸ்​ஸிங் முசா​ரா​பானி 3, தனகா ஷிவாங்கா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர்.

158 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடத் தொடங்​கிய ஜிம்​பாப்வே அணி 13 ஓவர்​கள் வீசப்​பட்ட நிலை​யில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்​கு 31 ரன்​கள்​ எடுத்​திருந்​தது.

SCROLL FOR NEXT