விளையாட்டு

பீட்ரைஸ் உலக சாதனை!

செய்திப்பிரிவு

யுஜின்: அமெரிக்காவின் யுஜின் நகரில் ப்ரீஃபோன்டைன் கிளாசிக் தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் கென்யாவின் பீட்ரைஸ் பந்தய தூரத்தை 13 நிமிடங்கள் 58.06 விநாடிகளில் கடந்து உலக சாதனை யுடன் முதலிடம் பிடித்து அசத்தினார்.

இதற்கு முன்னர் எத்தியோப்பியன் குடாஃப் செகே 14 நிமிடங்கள் 00.21 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்ததே சாதனையாக இருந்தது. இதை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் பீட்ரைஸ்.

SCROLL FOR NEXT