விளையாட்டு

தோல்விக்கான காரணங்களைக் கண்டுபிடிப்பதே என் முதல் வேலை: ரவி சாஸ்திரி

செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராக நியமிக்கப்பட்ட முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி, என்ன நடந்தது என்பதை விசாரிப்பதே தனது முதல் வேலை என்று கூறியுள்ளார்.

”முதலில் டன்கன் பிளெட்சருடன் அமர்ந்து, லார்ட்ஸில் அபார வெற்றி பெற்ற அணி ஏன் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் சரணடைந்தது என்பதற்கான காரணங்களை கேட்டறியவுள்ளேன். பிசிசிஐ, ரசிகர்கள் போலவே என்ன நடந்தது என்பதை அறிய நானுமே ஆவலாக இருக்கிறேன்.

நான் எதிர்காலம் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. இப்போதைக்கு என்ன தவறு நடந்தது என்பதை தெரிந்து கொண்டு அதனை ஒரு அறிக்கையாக கிரிக்கெட் வாரியத்திடம் அளிக்கவுள்ளேன். பிறகு அந்த அறிக்கை மீது செயல்படுவது பிசிசிஐ-யைப் பொறுத்தது”

என்று தெரிவித்துள்ளார் ரவி சாஸ்திரி.

இதற்கிடையே புதிய பயிற்சியாளர்கள் மற்றும் ரவி சாஸ்திரி நியமனங்களை சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். இவர்கள் உடனடியாக மாற்றம் கொண்டுவர இன்ஸ்டண்ட் காஃபி அல்ல, பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

SCROLL FOR NEXT