விளையாட்டு

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து

பிடிஐ

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்.

பாங்காங்கில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து இந்தோனேசியாவின் மாரிஸ்கா டுன்ஜுங்கை எதிர்கொண்டார்.

முதல் இரண்டு செட்டுகளை இருவரும் 23 -21, 16 - 21 என்று மாறி மாறி கைப்பற்றிய நிலையில், வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை சிந்து வெகு சிறப்பாக விளையாடி 21 -9 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றிகொண்டார்.

இதனைத் தொடர்ந்து இறுதிப் போட்டியில் சிந்து ஜப்பானின் நோசோமி ஒகுஹராவை எதிர்கொள்ள இருக்கிறார்.

தாய்லாந்து ஓபன் இறுதிப் போட்டியில் நுழைந்துள்ள சிந்துவுக்கு  சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT