விளையாட்டு

ஷான்டோ 136*, முஸ்பிகுர் ரகிம் 105* ரன் விளாசல் - காலே டெஸ்டில் வங்கதேச அணி 292 ரன் குவிப்பு

செய்திப்பிரிவு

வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த வங்கதேச அணி 45 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்தது. அனாமுல் ஹக் 0, ஷத்மான் இஸ்லாம் 14, மொமினுல் ஹக் 29 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய முஸ்பிகுர் ரகிமுடன் இணைந்து கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். அபாரமாக விளையடிய நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 202 பந்துகளில், ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 6-வது தனது சதத்தை விளாசினார். முஸ்பிகுர் ரகிம் 176 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார். இது அவரது 12-வது சதமாக அமைந்தது.

நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் வங்கதேச அணி 90 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 292 ரன்கள் குவித்தது. நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 136, முஸ்பிகுர் ரகிம் 105 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு சுமார் 74 ஓவர்கள் களத்தில் நின்று 247 ரன்கள் குவித்துள்ளது. கைவசம் 7 விக்கெட்கள் இருக்க வங்கதேச அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

SCROLL FOR NEXT