விளையாட்டு

குரோஷியா கால்பந்து அணிக்கு உற்சாக வரவேற்பு

செய்திப்பிரிவு

உலகக் கோப்பை இறுதி போட்டியில் தோல்வி அடைந்தாலும் சிறப்பாக விளையாடிய குரோஷியா அணியை அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாட்டங்களுடன் வரவேற்றனர்.

88 வருட உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் 4.5 லட்சம் மக்கள் தொகையை கொண்ட குரோஷியா நாடு இறுதிப் போட்டிக்கு முன்னேறி அனைவரையும் வியக்கவைத்தது.

ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த சிறிய நாடு ஒன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முதன்முறையாக நுழைந்தது.  இறுதிப் போட்டியில் 2-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியிடம் தோல்வியுற்றதது. எனினும் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் வெகு சிறப்பான விளையாட்டை குரோஷியா வீரர்கள் வெளிப்படுத்தினர் என பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

அதனை எதிரொலிக்கும் வகையில், குரோஷியா அணியின் கேப்டன் லுகா மோட்ரிச் இந்த உலகக்  கோப்பை தொடரில் சிறந்த வீரருக்கான விருதை பெற்றார்.

இந்த நிலையில் நாடு திரும்பிய குரோஷியா வீரர்கள் அந்நாட்டு மக்கள் சாலைகளில் இரு பக்கமும் கூடியும் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.

அவற்றில் சில புகைப்படங்கள்:

  hbpng100

SCROLL FOR NEXT