சுருச்சி சிங் | கோப்புப்படம் 
விளையாட்டு

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் சுருச்சி சிங்!

செய்திப்பிரிவு

முனிச்: ஜெர்மனியின் முனிச் நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சுருச்சி சிங் 241.9 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். பிரான்ஸின் காமில் ஜெட்ரெஜெவ்ஸ்கி (241.7) வெள்ளிப் பதக்கமும், சீனாவின் குயன்ஸுன் யாவோ (221.7) வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

          
SCROLL FOR NEXT