விளையாட்டு

2017-ல் பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்ற நடாலின் டென்னிஸ் ராக்கெட் ரூ.49 லட்சத்துக்கு விற்பனை!

வேட்டையன்

சென்னை: கடந்த 2017-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்ற ரஃபேல் நடாலின் டென்னிஸ் ராக்கெட் ரூ.49 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையானது. இதன் மூலம் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனையான டென்னிஸ் ராக்கெட் ஆகியுள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2022-ல் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் நடால் பயன்படுத்திய ராக்கெட் 1.39 லட்சம் டாலருக்கு ஏலத்தில் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

2017 பிரெஞ்சு ஓபன் தொடரில் ஸ்டான் வாவ்ரிங்காவை 6-2, 6-3, 6-1 நேர் செட் கணக்கில் நடால் வென்றார். அது அவரது 10-வது பிரெஞ்சு ஓபன் பட்டமாக அமைந்தது. அதற்கு பின்னர் மேலும் 4 முறை பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றார். மொத்தம் 14 முறை பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2017 சீசனில் மட்டும் மொத்தம் 24 போட்டிகளில் நடால் இந்த ராக்கெட்டை பயன்படுத்தி இருந்தார். இது புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT