விளையாட்டு

“பல ஆண்டுகளாக இந்தக் கனவைச் சுமந்தீர்கள்” - கோலிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

செய்திப்பிரிவு

ஐபிஎல் 2025 சீசனின் சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி அணி வென்றதையொட்டி அந்த அணிக்கு, விராட் கோலிக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “சிறப்பான ஆட்டம் ஆர்சிபி, ஆச்சர்யங்கள் நிறைந்த ஒரு சீசனில் ஒரு திரில் ஆன முடிவு. விராட் கோலி, இந்த கனவை நீங்கள் பல ஆண்டுகளாக சுமந்திருக்கிறீர்கள். இந்த கிரீடம் உங்களுக்கு மிகவும் சரியாக பொருந்துகிறது. அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடமிருந்து ஒரு வலுவான கம்பேக்கை எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஐபிஎல் ஆட்டத்தில் ஆர்சிபி அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் அந்த அணியின் 18 ஆண்டுகால தவம் முடிவுக்கு வருகிறது.இதனையடுத்து விராட் கோலி மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Well done, @RCBTweets! A thrilling end to a season full of surprises.@imVkohli, you have carried this dream for years and tonight, the crown truly suits you. #KingKohli

Expecting a strong comeback from @ChennaiIPL next season.#IPLfinal #IPL2025 #RCBvPBKS pic.twitter.com/sOLvpS21rU

SCROLL FOR NEXT